“தடைப்பட்டியலில்” இணைத்த அடுத்த பா.ஜ.க தலைவர்!

383

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்-கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்து தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் நாளை (2-ம் தேதி) காலை 6 மணியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என தடை விதித்துள்ளது.

Advertisement