பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..!

444

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஐஐடியை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஐஐடி மாணவி கடந்த மாதம் மர்மமான முறையில் அவரது அறையில் மரணமடைந்து கிடந்தார். மாணவியின் மரணத்திற்கு சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தான் காரணம் என கூறி, அவரை உடனடியாக கைது செய்யவேண்டுமெனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை என கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  என்ற மாணவரமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனுமதியின்றி போராடியதாக கூறி காவல்துறை மாணவர்களை  குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்றதால் ஐஐடி வளாகம் அமைந்திருக்கும் பிரதான சாலையில் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.