மன்னார்குடியில் பாஜக விற்கு எதிராக பிரச்சாரம் செய்த மாணவர் கைது..!

1598

திருவாரூர் அருகே பாஜகவிற்கு எதிராக துண்டுபிரசுரம் வழங்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 rafeek

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மாவட்டத் தலைவராக இருப்பவர் சர்வத் ரபீக். இவர் மன்னார்குடி கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று ‘’ மாற்றத்திற்காக வாக்களிப்போம்” என்ற தலைப்பு அடங்கிய துண்டுபிரசுரத்தை கல்லூரி வளாக வாயிலில் மாணவர்களுக்கு வழங்கியதாக மன்னார்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் அப்துர்ரஹ்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

cfi notice

 

இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் L. அப்துர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

abdur rahman campus front

“திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பில் நேற்று (25.03.2019) மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் அவர்களின் தலைமையில் ராஜகோபால சுவாமி கலைக்கல்லூரி வெளிபுறம் பாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இப்பிரச்சாரத்தில் தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் அவர்களை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தூண்டுதலின் பெயரில் மன்னை காவல்துறை பொய் வழக்கு புனைந்து கைது செய்துள்ளது. இந்த செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

ஜனநாயக நாட்டில் எவரையும் விமர்சனம் செய்ய அரசியலமைப்பு சட்டம் உரிமைகள் வழங்கிய போது, மோடி அரசு குறித்து பிரச்சாரம் செய்ததை குற்றம் போல் பாவித்து மாணவன் என்று கூட பாராமல் பொய்வழக்கு புனைந்து கைது செய்திருப்பது கருத்துரிமையை நசுக்கும் செயல்.

மோடி அரசுடன் இணைந்து அதிமுக அரசும் காவல்துறையும் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த பொய் வழக்கு ஜனநாயக விரோத செயலாகும்.

கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சர்வத் ரஃபீக் அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால் சட்ட ரீதியான போராட்டம் கொண்டு வழக்குகளை தகர்த்தெறிவோம்.

மேலும் மோடியின் பாசிச அரசிற்கு இத்தேர்தலில் மாணவர்களும் மக்களும் தக்க பாடம் புகட்டுவோம்” 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of