மேகதாதுவில் அணை கட்ட முடியுமா?… ஆணையம் விளக்கம்….

223

டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடாக மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன், கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மேகதாதுவில் அணை கட்ட முடியும் என உறுதிப்பட தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்புகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார்.