வாக்குப்பதிவு நாளில் விளம்பரம் செய்யலாம்?

86

தேர்தல் பிரசாரத்தின்போது, மின்னணு ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில், அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வது வழக்கம்.

ஓட்டுப் பதிவு நாளுக்கு, 48 மணி நேரத்துக்கு முன், ‘டிவி’ ரேடியோ மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், செய்தித் தாள்களில், ஓட்டுப்பதிவு நாளன்றும் விளம்பரங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், மின்னணு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, செய்தித் தாள்களுக்கும் நீட்டிக்க, மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. ஆனால், இதற்கு, சட்ட அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால், ‘வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு நாளன்று, செய்தித் தாள்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படாது’ என தகவல் வெளியாகியுள்ளது.