கனரா வங்கியில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

1691

கனரா வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும்.

அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த சேவை கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும், அதனுடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், பணம் எடுப்பதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Jsatheesh Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Jsatheesh
Guest
Jsatheesh

All banks closed now. Next India developed automatically.