இனி சின்னத்துடன் புகைப்படமும் இருக்கும் ? – தேர்தல் கமிஷன்

261
evmmachine11.3.19

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும்.

இந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

எனவே இதை தவிர்க்கும் வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தபால் தலை அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of