வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணியை மக்களுக்கு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்

532

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணியை மக்களுக்கு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குற்றப்பின்னணி உடைய குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் குற்றப்பின்னணி உடையவர்களின் தகவல்களை விளம்பரப்படுத்தலாம் என்றும் கூறியது. இதையடுத்து குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் தகவல்கள் தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் கோரியுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணியை மக்களுக்கு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது, விளம்பரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement