தலையணையில் வைத்து கஞ்சா கடத்தியவர்கள் கைது

313

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கஞ்சா விற்பதாகவும் போலீஸாருக்குத் தலகவல் சென்றது. இதனையடுத்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையில் ஒருதனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜோதி என்ற பெண்ணின் வீட்டிலிருந்து 3 கிலோ கஞ்சாவையும், கொருக்குப்பேட்டை பகுதில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் காசிமேடு பகுதியில் வசிக்கும் பாலமுருகன், இளங்கோவன் ஆகியோரிடம் போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கூறிய தகவலின்படி மிஞ்சூர் பகுதில் வசிக்கும் சுரேஷ் குமார் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு தலையணையில் கஞ்சா அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து போலீஸார் சுரேஷிடம் நடத்திய விசாரணையில் அவரும், அவரது மனைவியும் ஒரு வாடகை வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட சென்னை பகுதிகளுக்கு விநியோகிப்பதை உறுதி செய்தனர்.

மேலும் போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் ரயிலில் விசாகப்பட்டிணம் சென்று அங்கு கஞ்சாவை கொள்முதல் செய்து, ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். இதில் போர்வையைக் கிழித்து அதை தலையணையாக்கி அதற்குள் கஞ்சாவை திணித்து கடத்தியதாக கூறியுள்ளனர்.

சாதாரண பயனிகள் போன்று தலையணை எடுத்துச் சென்று அதற்குள் கஞ்சாவை வைத்து கடத்தியும், இதை ஆன்லைனில் வியாபாரம் செய்த தம்பதியையும், இவர்களுக்கு மூளையாக இருந்த சசிக்குமாரையும் போலீஸார் தேடிவருவதாகத் தகவல்கள் தெரிகிக்கின்றன.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of