நீண்டகாலத்துக்கு முட்டாளாக்க முடியாது. – சிவசேனா.

309
shivasena13.3.19

சிவசேனா, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, இருப்பினும் அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது சிவசேனா.

இந்நிலையில் தற்போது, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக நம் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மற்ற பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றெல்லாம் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. (இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால்) இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of