கேப்டன் சொன்னால் ஆயிரம் அர்த்தம் இருக்கும் – விஜய பிரபாகரன்

242

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் எதை சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்றும், எனவே அவரது கட்டளையை ஏற்று அனைவரும் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், யாரெல்லாம் தேமுதிகவை அழிக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கு முன் வெற்றி பெற்று கட்சியின் பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரபாகரன், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலமாக உள்ளார் என்றும், விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.