பொள்ளாச்சியில் நடைபெற்ற அடுத்த சோகம்! 8 பேர் பலி!!

521

கோவை மாவட்டம் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அவரது மனைவி சித்ரா மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.