“எதுக்கு என் கார உரசுன”.. நடுரோட்டில் வாக்குவாதம்.. – அசுர வேகத்தில் வந்த பஸ்ஸால் நடந்த பயங்கரம்..!

768

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.

கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடியற்காலை நேரம் 3 மணி இருக்கும்.

உளுந்தூர்பேட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு பஸ்,அந்த காரினை லேசாக உரசியபடி சென்றது.

இதனால் பதறி போன ஐசக் அய்யா குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி, பஸ் டிரைவருடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.. பஸ் டிரைவரும் தொடர்ந்து ஐசக்குடன் வாக்குவாதம் செய்தார்.. நீதான் பஸ்ஸை நெருக்கி காரை ஓட்டி வந்தே என்று டிரைவரும் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ்ஸுக்கும் காருக்கும் நடுவில் நின்றுகொண்டு இந்த தகராறு செய்து கொண்டிருந்தனர்.. ஆந்த சமயத்தில் பின்னாடியே வேகமாக வந்த பிரைவேட் பஸ், அரசு பேருந்தின் மீது மோதியது.

இதில், புது மாப்பிள்ளை ராஜன் உட்பட பஸ்ஸில் பயணம் செய்த வெள்ளைச்சாமி, அருண் பாண்டியன், சற்குணம் உள்ளிட்ட 4 பேருமே சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. டிரைவர்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்..

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 4 பேரின் உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of