கார், ஆட்டோ, லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் பலி

555

மதுரையை சேர்ந்த ராசையா என்பவர் தனது உறவினர்களோடு நெல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

கங்கைகொண்டான் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்ற கார் ஆட்டோ மீது லேசாக மோதியது.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே சாலையில் வைத்தே வாக்குவாதம் ஏற்பட்டது.

காரையும், ஆட்டோவையும் சாலையில் நிறுத்தி பேசிக்கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று ஆட்டோ மீதும், கார் மீதும் மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த ராசையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவசகாயம், அன்னாள் ஜெயசீலி ஆகிய இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் ராஜ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.