கார் கவிழ்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் பலி

839
நெல்லையில் நடைபெற்ற நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த ராஜேஷ்குமார், ராஜா, விஜயக்குமார், வின்சன் தேவன், ரோஜ் ஆகிய 5 பேரும்  கூட்டத்தை முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற இடத்தில் கார் சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேர் படுகாய மடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்தது மங்களமேடு போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement