வாடிக்கையாளர்களை பெருமை படுத்தும் அந்த “Single Copy Car”

447

வாகனங்களின் தேவை அதிமாக தொடங்கிய காலத்தில் இருந்தே வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகரித்தன. தேவைக்கு அதிமாக வாகனங்களை வாங்கி குவித்த சிலர், தங்களுக்கென்று பிரத்தியேகமாக வாகனங்களை வடிவமைக்க பல பிரபல கார் தயாரிக்கும் நிறுவனங்களை நாடினர்.

அவர்கள் அவ்வாறு சென்றதால் உருவானதே “Single Copy Car”, உலகில் தலைசிறந்த கார் தயாரிக்கும் நிறுவனங்களான ‘ரோல்ஸ் ராய்ஸ்’, புகாட்டி, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் இந்த Single Copy Car எனப்படும் பிரத்தியேக கார்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கி தருகின்றன.

‘Rolls Royce Sweptail’ டாலர் மதிப்பில் சுமார் 13 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 92 கோடி) மதிப்புக்கொண்ட இந்த வாகனத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர் ஒருவருக்காக பிரத்தியேக தயாரித்தது. யாட்ச் என்று அழைக்கப்படும் படகு வடிவில் தனக்கு ஒரு கார் வேண்டும் என்று அந்த வாடிக்கையாளர் கேட்டதால் இந்த காரை தயாரித்து கொடுத்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

sweptail

Buggati la-voiture-noire டாலர் மதிப்பில் சுமார் 12 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 87 கோடி) மதிப்புக்கொண்ட இந்த வாகனத்தை Buggati நிறுவனம் தனது பிரத்தியேக வடிக்கையாளருக்காக தயாரித்துள்ளது. மின்னல் வேகத்தில் செல்லும் இந்த கார் ‘கருப்பு’ என்று பொருள்படும் பெயரை கொண்டுள்ளது. இந்த நிறுவன தலைவருடை மகன் இந்த வாகனத்தின் வடிவமைப்பில் நேரடியாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

bugatti

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of