நிறுவனத்தில் பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் கார் பரிசு

1068

தனது நிறுவனத்தில் விசுவாசமாக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து குஜராத் வைரவியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தில் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் சவ்ஜி தோலாகியா. இவரது நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலைசெய்த 3 ஊழியர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து சவ்ஜி தோலாகியா இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

பென்ஸ் காரை பரிசாக பெற்றுள்ள 3 பேரும் ஏற்றுமதி நிறுவனம் தொடங்கும் போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்து வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் தொடர்ந்து இங்குப் பணி செய்து தற்போது உயர் பதவியில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of