சீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin

407

சீனா ஓபன் பேட்மிண்டன் தற்போது சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் முதல் சுற்றில் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-16 எனவும், 2-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி கரோலினா மரின் வெற்றி பெற்றார். கரோலினா மரின் கடந்த 8 மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதனை அடுத்து தற்போது நடைபெறும் இரண்டாவது சுற்றில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of