பெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்!

660

திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த இவர், மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கல்பேட்டா போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.