நடிச்சது நான் இல்லை ? டைரக்டர் மீது வழக்கு போட்ட பாபி

751

பாபிசிம்ஹா, கொடைக்கானலில் பிறந்த இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பேட்டை, ஜிகர்தண்டா, நேரம், உள்ளிட்ட முன்னணி படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னிதேவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.

மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன். இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் அதில் நான் நடித்து உள்ளதாக விளம்பரமும் செய்து இருக்கிறார்கள். எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டும், ‘கிராபிக்ஸ்’ செய்தும் படத்தை முடித்து உள்ளனர். இது தொடர்பாக டைரக்டர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நந்தம்பாக்கம் போலீசாருக்கு துணை கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.