தமிழக அரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பொன். மாணிக்கவேல்

516

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்து வருகிறது.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகளை அரசு செய்துக் கொடுக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள், வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை என பொன். மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள அவர் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of