கதிர் ஆனந்த் மீது லஞ்சம் வழங்க முயற்சியத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

346

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி போலிசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது காட்பாடி போலிசார் 3 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் கொடுக்க முயற்சித்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், வேலூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அதுமட்டுமின்றி வேலூரில் தொடர் பண பறிமுதல் நடந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது வழக்கு பதியப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.