தேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு

703

பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைகள் மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், தலைவர்கள் சிலை மீது காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், காவியை களங்கம் என்றால், தேசிய கொடியில் இருந்து காவியை நீக்கிவிடுவீர்களா என்றும், தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும், 3 மதங்களை குறிக்கிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ராஜரத்தினம் என்பவர், தேசியக்கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட சைபர் க்ரைம் போலீஸ், எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement