கள்ள ஓட்டு போட்டாரா சிவகார்த்திகேயன் ? வழக்கு பதிய தேர்தல் ஆணையம் முடிவு

421

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இந்த மக்களவைத்தேர்தலில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், முதலில் சிவகார்த்திகேயனை வாக்களிப்பதற்கு தேர்தல் அதிகாரி அனுமதிக்கவில்லை. பின்னர், இரண்டு மணிநேர வாக்குவாதத்திற்குப்பிறகு சிவகார்த்திகேயனை வாக்களிப்பதற்கு தேர்தல் அதிகாரி அனுமதித்தார்.

தேர்தல் முடிந்த நிலையில், தற்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் வாக்களித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தபிரச்சனை தொடர்பாக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களிப்பது கள்ளவாக்கு போட்டதற்கு சமம் என்று தெரிவி்த்தார். இதனால், வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரிமீதும், சிவகார்த்திகேயன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

பொதுவாக கள்ளவாக்கு செலுத்தினால் ஓராண்டுவரை சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of