மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய டிரைவர்

202

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகணத்தில் சன்சிட்டி நகரில் வாடைகைக்கு கார் ஓட்டு வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராஜ்பீர் சிங். இவர் தனது காரில் 92 வயதான மூதாட்டியை ஏற்றிச் சென்றார்.

செல்லும் வழியில் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார். தற்போது வங்கியில் இருந்தது 17 லட்சம் ரூபாயை எடுத்து மிதமுள்ள வருமான வரியை செலுத்த போவதாக தெரிவித்தார்.

இதில் ஏதோ மோசடி உள்ளதாக ராஜ்பீர் சிங் மனதில் தோன்றியது. இதை அந்த மூதாட்டியிடம் சொன்ன போது அவர் நம்பவில்லை. உடனே முதாட்டியிடம் வரி அலுவலரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பல கேள்விகளை கேட்டார். அங்கிருந்து சரியான பதில் ஏதும் வரவில்லை.

பின்பு தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஆனால் முதாட்டி வங்கிக்கு சென்று பணத்தை கட்ட வேண்டும் என்று குறியாகவே இருந்தார். அதனால் காரை நேராக போலீஸ் நிலையத்திற்கு ஒட்டி சென்ற ராஜ்பீர் சிங் விபரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சொன்னான்.

அந்த விசாரணையில் வருமான வரி அலுவலகத்தில் இருந்து அந்த முதாட்டிக்கு எந்த அழைப்பு செல்லவில்லை என்பதும் முதாட்டியின் பணத்தை அபகரிக்க மோசடி கும்பல் முயற்சித்தது தெரியவந்தது.

இதனை முதாட்டியிடம் நடந்ததை சொல்லி புரிய வைத்து, டிரைவரின் நேர்மையையும் பாராட்டி அவருக்கு3500 ரூபாய் அன்பாளிப்பு வழங்கி இந்த செய்தியை முகநூலில் இந்த செய்தியை வெளியிட்டனர்.

சமூகவலைதளங்களில் ராஜ்பீர் சிங்கிற்கு பாரட்டுகள் குவிந்த வண்ணமாய் இருக்கிறது. ராஜ்பீர் சிங்கிற்கு மூதாட்டி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of