கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர்! நிர்வாணமாக்கிய கொடூர கிராமம்! வைரல் வீடியோ!

2480

கர்நாடக மாநிலம் சாம்நாஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் சமூகத்தை சேர்ந்த இவர் ஐஏஎஸ் தேர்வெழுத மைசூருக்கு சென்றுள்ளார்.

அங்கு தேர்வு எழுத தாமதமானதால், அவரது கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு வரும் வழியில், அவரது இருசக்கர வாகனம் பழுதாகியுள்ளது. இதனால் அந்த இளைஞர் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்றுள்ளார்.

தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, கோவில் பூசாரி, அவரது மகன் மற்றும் அப்பகுதி மக்கள், இளைஞரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பூசாரியையும் அவரது மகனையும் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of