அடேங்கப்பா..! விளக்கெண்ணெயில் இத்தனை பலன்களா.? விளக்கெண்ணெய்-னு திட்டுனா கவலைப்படாதிங்க..!

2853

ஆமனக்கு செடியில் இருந்து தயார் செய்யப்படுவது தான் இந்த விளக்கெண்ணெய். ஆமனுக்கு செடி, மண்ணில் இருக்கும் பல்வேறு சத்துக்களை உறிஞ்சி எடுத்து விடுகிறது.

இந்த சத்துக்கள் விளக்கெண்ணெயிலும் நிரம்பி வழிகிறது. விளக்கெண்ணெய் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்ப்போம்..

1. விளக்கெண்ணெய் பேதியை போக்கும் திறன் கொண்டது. வயிற்றை சுத்தம் செய்யவும், மலம் எளிதில் கழியவும் இந்த விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

2. விளக்கெண்ணெயை தொப்புளில் வைப்பதன் மூலம் கண் பார்வை தெளிவாகும்.

3. மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாயுத்தொல்லைப் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெய் நல்ல பலனை தரும்.

4. குழந்தை பிரசவித்த தாய்மார்களில் சிலருக்கு, பால் அதிகம் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், மார்பகங்களில் விளக்கெண்ணெயை தேய்த்தால், பால் சுரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

5. விளக்கெண்ணெயை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம், உடல் சூடு குறையும். அதுமட்டுமல்லாது, நரம்பு மற்றும் மூட்டு வலிகளுக்கு வலி நிவாரணியாகவும் இது பயன்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of