முதுமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கணக்கெடுப்பு

589

முதுமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மசினகுடி , முதுமலை , தெப்பக்காடு , கார்குடி , நெலக்கோட்டை வனச்சரங்களில் மொத்தம்191 இடங்களில் , தலா இரண்டு கேமராக்கள் என 382 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ளது.

இந்த பணி இன்று முதல் 25 நாட்களுக்கு நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். கேமராக்களில் பதிவாகும் படங்கள் , வீடியோக்கள் ழூன்று நாட்களுக்கு ஒரு முறை பதிவிரக்கம் செய்து புலிகள் நடமாட்டம் குறித்து பதிவு செய்யப்படும் என்று முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.