கோவையில் முதல் முறையாக பூனைகள் கண்காட்சி

76

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற பூனை கண்காட்சியை பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

தி கோயம்புத்தூர் கேட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் 25 வகையான பூனைகள் பங்கேற்றன. உலகில் உள்ள 98 வகையான மற்ற பூனைகள் குறித்தும் ஒளிப்பட காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.

பூனை வளர்ப்பவர்களும் தங்கள் பூனைகளை பராமரிப்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. கண்காட்சிக்கு வந்த சிறுவர்கள் பலர் பூனைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of