வந்தது காவிரி நீர்..! – நிரம்பி வழியும் மேட்டூர் அணை..! – மகிழ்ச்சியில் தமிழகம்..!

606

கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் இன்று (ஜூலை.23) மேட்டூர் அணை வந்தது. மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 1500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் படிப்படியாக அதிகரித்து தற்பொழுது 7000 கன அடியாக அதிகரித்துள்ளது.