சாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்

430

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் படி வியாபாரிகளின் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்தது, பென்னிக்ஸ்சின் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி முன்பு ஆஜரான 5 பேரும், கடந்த ஜூன் 19ஆம் தேதி என்ன நடந்தது என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.