150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

310

நாடெங்கிலும் பல்வேறு நகரங்களில் உள்ள பல அரசு அலுவலகங்களில் ஊழல் தொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

அதன்படி சென்னை, மதுரை, புதுச்சேரி, தஞ்சை, பெங்களுரு, டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 150 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரயில்வே நிலக்கரி சுரங்க நிறுவனம் மருத்துவ சுகாதார நிறுவனங்கள் இந்திய உணவுக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி தீயணைப்பு  போக்குவரத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து அங்கு சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மாலை தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது. அரசின் லஞ்ச ஒழிப்பு துறையினர் உதவியுடன் நாடெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement