மருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை

989

கொரோனா பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணையவழி குற்றவாளிகள், மருத்துவமனை நிர்வாகங்களை குறிவைத்து பணம் பறிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில போலீசாரை உஷார் படுத்தியுள்ள சி.பி.ஐ, மருத்துவமனை மற்றும் மருத்துவ சேவைகளை குறிவைத்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் இணைய குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ள முக்கிய ஆவணங்களை ஹேக் செய்யும் இந்த குற்றவாளிகள், பணம் கொடுத்தால்தான் அவற்றை விடுவிக்க முடியும் என மிரட்டும் செயல்கள் நடைபெறுவதாக இன்டர்போலும் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, மருத்துவமனை நிர்வாகங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement