சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுப்பு : 2 மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம்

605

சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுத்துள்ள ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தவோ, விசாரிக்கவோ அனுமதி கிடையாது என்று முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி அறிவித்துள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அருண்ஜெட்லி, மறைப்பதற்கு ஏராளமாக இருப்பவர்கள்தான் தம் மாநிலத்திற்குள் சி.பி.ஐ. நுழையக்கூடாது என்று மறுப்பு தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஊழல் விவகாரத்தில் எந்த மாநிலத்திற்கும் இறையாண்மை கிடையாது என்றும் தெரிவித்தார்.

 

Advertisement