201 கோடி வங்கி மோசடி வழக்கு : 5 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

1379

201 கோடி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை அமைந்தகரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் குமார், வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

Advertisement