சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்..! நல்ல செய்தி சொன்ன நீதிமன்றம்..!

511

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம்தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காவல், அமலாக்கத்துறை காவல், நீதிமன்றக்காவல் என இரண்டுமாதங்களுக்கும் அதிகமாக காவலில் இருக்கிறார்.

தற்போது, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தின் உடல்நிலையைக்கருத்தில் கொண்டு அவருக்கு வீட்டுச்சாப்பாடு வழங்கவும், தனி அறை ஒதுக்கீடு செய்யவும் சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில், சிதம்பரத்தை மேலும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

சிதம்பரத்திற்கு மூன்று வேளையும் வீட்டுச்சாப்பாடு வழங்குவதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், விதிமுறைகளுக்குட்பட்டு திகார்சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நவம்பர் மாதம் 13- ஆம்தேதி வரை ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றக்காவல் அளித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of