குட்கா ஊழல் தொடர்பாக சென்னையை சேர்ந்த 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

546

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் சிபிஐ அதிகாரிகள் 2 பைகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றதாகதகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக, இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார், ஆகிய இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதவராவிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின் முடிவில் இரண்டு பேரையும் டெல்லி அழைத்துச்சென்று விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement