அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக செயல்படுகிறது- நீதிபதி ரஞ்சன் கோகோய்

240

அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் மட்டும் சி.பி.ஐ சிறப்பாக செயல்படுகிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை என்று தெரிவித்தார்.

ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில்  சி.பி.ஐ சிறப்பாக செயல்படுவதாக கூறினார். சி.பி.ஐ அமைப்பில் உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்துரைப்பதால் எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை என்றும் ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.