மன்னிப்பா ! – அதெல்லாம் ஏத்துக்க முடியாது – சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு அபராதம்

519

சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் மன்னிப்பை ஏற்க மறுத்து, சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஷ்வர ராவிற்கு 1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Nageswara_Rao

 

சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மா முசாபர்பூர் பெண்கள் விடுதி முறைகேடு வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் நாகேஷ்வர ராவ் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட பிறகு ஏ.கே.ஷர்மாவை பணியிடை மாற்றம் செய்தார். இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டவர்கள் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மாவை பணியிடை மாற்றம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சிபிஐ அதிகாரி இடமாற்றம் தொடர்பான வழக்கில் மத்தியஅரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

மேலும் சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஷ்வர ராவிற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும்,  நீதிமன்ற அலுவல் முடியும்வரை சிறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.