சாத்தான்குளம் சம்பவம் – சிபிஐ செய்த முதல் வேலையே இதான்

578

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டெல்லியில் இருந்து வி.கே. சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு இன்று மதுரை வந்துள்ளது.

இதையடுத்து, மதுரையில் உள்ள சிபிஐ – அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி – ஐஜி சங்கர், அனைத்து ஆவணங்களும் இன்று மாலை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற விசாரணை, செல்போன் கடை அமைந்திருக்கும் பகுதியில் நடத்திய விசாரணை, பென்னிக்ஸ் நண்பர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் தலைமைக்காவலர் ரேவதி உள்ளிட்டோரிடம் நடைபெற்ற விசாரணை விவரங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கபடும் என்றும் ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.

இதனிடையே, சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள்  தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மைக்குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பென்னிக்ஸ் – ஜெயராஜை தாக்குவதற்கு பயன்படுத்தி ரத்தக்கறை படிந்த லத்திக்கம்புகள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க், உள்ளிட்ட ஆவணங்கள்,தடயங்கள் ஆகியவை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement