சீருடை பணியாளர் தேர்வு முறைகேடு : CBI விசாரிக்க கோரிக்கை

285

காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, கடந்த 2-ம் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் முறைகேடாக தேர்வானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக CBI விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்றும், தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசு பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடை பணியாளர் தேர்வில் பெரிய மோசடி நடந்துள்ளதால், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of