அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி கேமரா!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

120

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும், பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில், பாலியல் சீண்டல்கள் சற்று அதிகமாகவே உள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் பலர் தங்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு, ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறையிலும், சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை ஏற்கணவே அமைக்கப்பட்ட சிபிசிஐடி குழுவே விசாரிக்கலாம் என்றும் அவர்கள் தீர்ப்பு வழங்கினர்.