அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

175

தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி, 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று கூறினார்.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 23 கோடி ரூபாயில் செலவில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, 10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of