அழகான ஹீரோக்களோடு கொண்டாடுவதே பெருமை.

271
gowthami9.3.19

மகளிர் தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், கௌதமி கிராமத்து பெண்களுடன் கொண்டாடி இருக்கிறார். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, நண்பியாகவோ, தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் செய்பவள் தான் பெண்.

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய போர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ என்றும் அவர் கூறினார்.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற இடங்களின் அந்த அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது. தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி’ என்றார்.