நம்பர் 1 செல்போன் எது..? முழுத்தகவல் இதோ..!

2166

இன்று நம்மில் செல்போன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட செல்போனில், ஆரம்பம் முதல் இன்று வரை, விற்பனை செய்வதில் யார் நம்பர் ஒன் தெரியுமா.. இதோ, ஐந்து, ஐந்து ஆண்டுகளாக அந்த புள்ளி விவரங்களை உங்கள் கண்முன் பிரத்யேகமாக கொண்டு வருகிறோம்..

தொலைத் தொடர்பு உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கும் வகையில் வந்தவைதான் மொபைல் போன்கள். 1992-ம் ஆண்டு வாக்கிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மொபைல் போன்கள், 1994-ம் ஆண்டில்தால் உலகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு களமிறங்கியது.

மோட்டரோலா, நோக்கியா, என்.ஈ.சி. ஆகியவற்றின் மொபைல் போன்கள் என 3 நிறுவனங்கள்தான் முதலில் முன்னணியில் இருந்தன. முதல் இரண்டு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மோட்டரோலாவை பின்னுக்குத் தள்ளி, 96-ம் ஆண்டு நோக்கியா முதலிடம் பிடித்தது.

எரிக்சன், பேனசோனிக், அல்காடெல், சாம்சங்க் ஆகிய நிறுவனங்கள் களமிறங்கிய பிறகும், நோக்கியா தொடர்ந்து முன்னிலை வகித்தது. 1999-ம் ஆண்டு நோக்கியாவின் விற்பனை, 12 கோடியே, 22 லட்சத்து 16 ஆயிரத்து 584 போன்கள்… இரண்டாம் இடத்தில், மோட்டரோலாவும், மூன்றாவது இடத்தில் எரிக்சனும் இருந்தன.

மொபைல் போன்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த ஐந்தாண்டுகளில், சோனி, எல்ஜி. சீமென்ஸ் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் செல்போன் தயாரிப்பில் இறங்கின. 96-ம் ஆண்டு பிடித்த முதலிடத்தை தொடர்ந்து நோக்கியா தக்க வைத்துக் கொண்டது. 2004-ம் ஆண்டின்படி, நோக்கியா போன்கள் மட்டும் 30 கோடியே, 6 லட்சத்து, 50 ஆயிரத்து 528 விற்பனையானது. மோட்டரோலா 2-ம் இடத்திலும், சாம்சங் 3-ம் இடத்திலும் இருந்தன.

அடுத்த 5 ஆண்டு காலத்தில், மேலும் பல நிறுவனங்கள் இறங்கியதால், போன்களில் விலையும் குறைய ஆரம்பித்தது. போட்டியும் அதிகமானது. அடுத்த ஐந்தாண்டு காலத்திலும், நோக்கியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்பட்டாலும், நோக்கியாவின் முதலிடத்தை அசைக்க முடியவில்லை.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆப்பிள் நிறுவன போன்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நுழைவு என பல முக்கிய நிறுவனங்கள் களமிறங்கின. சாம்சங் நிறுவனம், அதிரடியாக, 2014-ம் ஆண்டு, 33 கோடியே, 8 லட்சத்து 29 ஆயிரத்து 824 போன்கள் விற்று, முதலிடத்தை பெற்றது.

இந்த ஆண்டில் இருந்து, நோக்கியாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது. ஆனால், நோக்கியாவின் 1100, 1110 ஆகிய போன்கள் தலா 25 கோடி போன்கள் விற்று, இன்று வரை அதிக போன்கள் விற்பனையான மாடல் என்ற சாதனையை செய்துள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டில் இன்றைய நிலவரப்படி, முதலிட விற்பனையில் இருப்பவை சாம்சங் நிறுவனம்தான். 28 கோடியே, 98 லட்சத்து 36 ஆயிரத்து 992 போன்கள் விற்பனை செய்துள்ளது. அடுத்த இடத்தில் ஹீவாய் போன்களும் மூன்றாவது இடத்தில் ஆப்பிள் போன்களும் உள்ளன. தற்போது விவோ, ஆப்போ, சியோமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன.

உலகின் மிகப்பெரிய செல்போன் சந்தையாக இந்தியா இருந்தாலும், இந்திய தயாரிப்பு போன்களால் இதுவரை விற்பனையில் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகுதான் மொபைல்போன் பெரிய அளவுக்கு பரிச்சயமானது என்றாலும், 2010-க்குப் பிறகு மிகப்பெரிய எண்ணிக்கையில் பயன்படுத்த தொடங்கினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of