செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய இளைஞர் – இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

881

ஓசூர் அருகே செல்போனை ஹெல்மேட்டுக்குள் வைத்து பேசிவாறு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், செல்போன் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியரிசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார்.

செல்போனில் பேசியவாறு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சூளகிரியில் திடீரென்று செல்போன் வெடித்து சிதறியது.

இதில் ஆறுமுகத்தின் தலை, காது, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார், அவரை மீட்டு சிகிச்சை காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செல்போன் வெடித்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement