தூங்கிய காவலாளியின் செல்போனை தூக்கிய திருடன் – வைரலாகும் CCTV காட்சி

198

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 22ஆம் தேதி இரவு, விடுதி வாயிலில் அமர்ந்திருந்த இரவு நேர காவலாளி குணசேகரன் கண் அசந்து தூங்கியுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், குணசேகரனின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அங்கிருக்கக்கூடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதையொட்டி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of