அருண் ஜெட்லி இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு..! – லொகேஷன் ஷேர் செய்த பாதிக்கப்பட்ட நபர்..!

395

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், இது தொடர்பாக காஷ்மியர் கேட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புகார் எதுவும் வரவில்லை என காஷ்மியர் கேட் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள செல்போனை பறிகொடுத்தவர்களில் ஒருவரான திஜாரவாலா, செல்போன் திருட்டு போனது குறித்தும், செல்போனின் தற்போதைய லொக்கேஷன் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of