மத்திய பட்ஜெட்டில் இதை செய்யுங்கள்..! – தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

837

மத்திய பட்ஜெட்டில், தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில், கையினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலை, பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை என 3 வகையாக வரி விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தீப்பெட்டி தொழிலை சிறுதொழில் பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசு, கையினால் உற்பத்தி செய்யும் தீப்பெட்டிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியையும், பகுதி இயந்திரம் மற்றும் முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதித்தது.

இதன் காரணமாக, பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement