கேரளாவிற்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு வருகை

849

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பருவ மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவை சந்தித்தது. 14 மாவட்டங்கள் உருக்குலைந்தன. மழை வெள்ளம் காரணமாக 488 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளப்பாதிப்பின் போது, பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், கேரளா அரசு வெள்ள பாதிப்பு தொடர்பான நினைவூட்டலை மத்திய அரசுக்கு அனுப்பியது.

அந்த மனுவில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை, சொத்துகள் இழப்பு, கட்டமைப்பு மற்றும் விவசாய பயிர்களின் சேத விவரங்களை முழுமையாக குறிப்பிட்டு இருந்தது.

இதனால் வெள்ளம் பாதித்த தங்கள் மாநிலத்திற்கு 4 ஆயிரத்து 700 கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் பினராய் விஜயன் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளப் பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின் சிறப்பு செயலாளர் பி.ஆர் சர்மா தலைமையிலான பல்வேறு அமைச்சக அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு கேரளா சென்றுள்ளது.

இக்குழு அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதையடுத்து இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை பார்த்து கேரளாவுக்கு, மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of